11/27/09

விஜயின் சுறா !!!

சுறா விஜய்யின் ஐம்பதாவது படம். சகல விதத்திலும் படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஹைதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பைத் தொடர்ந்து டிசம்ப‌ரில் கேரளா செல்கிறது மொத்த யூனிட்டும்.

இயக்குனரின் நிலை

உணர்ச்சிகளை ஓவராக உருட்டியதில் சேர இயக்குன‌‌ரின் கடைசி இரண்டு படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் பிசுபிசுத்தது. இனி படம் இயக்க யாரும் வாய்ப்பு தருவார்களா என்பதே சந்தேகம் என்ற நிலையில் தனது பிளாக்பஸ்டர் படமான கையெழுத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஸ்கி‌ரிப்ட் அமைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். யாரும் படத்தை தயா‌ரிக்க முன்வராவிட்டால், நாலு படங்களில் நடித்து தானே சொந்தமாக தயா‌ரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

தயாராகிறது எந்திரன் ?!

எந்திரன் படத்தின் டாக்கி போர்ஷன் முடிந்துவிட்டது. எந்திரன் படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய 180 கோடிகள் என்கின்றன செய்திகள். இந்த மெகா பட்ஜெட்டுக்கு ஏற்ப பிரமாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார் ஷங்கர்.டாக்கி போர்ஷன் முழுமையாக முடிந்த நிலையில் படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. ர‌ஜினி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி வருகிறார். இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி இருப்பதாக நெருக்கமான வட்டாரம் தகவல் சொல்கிறது.
கிராஃபிக்ஸ் வேலைகள் இருப்பதால் 2010ல் தான் படம் வெளியாகும் என்கிறார்கள். அனேகமாக 2010 தீபாவளிக்கு படம் வெளியாகும். அதற்குமுன் சுல்தான் தி வா‌ரியரை வெளியிடும் முனைப்பில் இருக்கிறது ர‌ஜினி வட்டாரம்

11/23/09

வருகிறது யோகி !!

பருத்திவீரன்லிருந்து தமிழக ரசிகர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. அதற்குள் அதைவிட பிரமாதமாக ஒரு படத்தை தயா‌ரித்து நடித்திருக்கிறார் அமீர். விளம்பரம் இல்லாமலே போட்ட காசை பார்த்துவிடலாம். விளம்பரமும் சேர்ந்தால்...? யோகி படத்தை வாங்க சன் பிக்சர்ஸ் முயன்றும் அது நடக்கவில்லை. இத்தனைக்கும் யோகியை சன் பிக்சர்ஸ் வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாயின. இடையில் என்ன நடந்ததோ? யோகியை ச‌ன்னுக்கு விடாமல் அமீரே விலைபேசி ஏ‌ரியா விற்பனையை நடத்தியிருக்கிறார். சில ஏ‌ரியாக்களில் அவரே படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம்.பக்‌ரித் பண்டிகையை முன்னிட்டு யோகி திரைக்கு வருகிறது.

11/22/09

பசங்க படத்திற்கு விருது



பசங்க' திரைப்படத்துக்காக சர்வதேச அளவிலான சிறந்த இயக்குநருக்கான (தங்க யானை விருது) விருதை பெற்றார் இயக்குநர் பாண்டிராஜ். ஹைதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 20 நாடுகளைச் சேர்ந்த 70 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த பட விழாவில் தமிழில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற "பசங்க' திரைப்படம் "கிட்ஸ்' என்ற பெயரில் திரையிடப்பட்டது. இயக்குநர் சசிகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் சேரனின் உதவியாளர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் குழந்தைகளின் உலகத்தை தனி பாணியில் படம் பிடித்துக் காட்டியிருந்தது. திரைப்பட விழாவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (அக்-20) விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறந்த குழந்தைகள் பட இயக்குநராக பாண்டிராஜ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கான விருதை (தங்க யானை விருது) பிரபல இந்தி நடிகை ஜூகி சாவ்லா வழங்கினார். "டூ மென்'ஸ் கிளாஸ் ரூம்' (சீனா), "ஹெல்ப் மைன் ஹெல்ப்' (ஈரான்), சிறந்த திரைப்படங்களாகவும், "சைல்டு அண்ட் தி ஏஞ்சல்' (ஈரான்) சிறந்த திரைக்கதையுள்ள படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

கலக்குறீங்க சிம்ரன் !!!


சிம்ரன் திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் ஓரிரு படங்களில் நடித்தாலும், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார். இதன் மூலம் நிறைய சம்பாதிக்கிறாராம். ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ரூ. 75 லட்சம் சம்பளம் நிர்ணயித்துள்ளார். தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் வாங்குகிறார். கூடுதலாக இரவில் நடிக்க ரூ.2 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.5 லட்சம் வாங்குகிறார்.

ஷாமின் அவதாரம் ?

நடிகர் ஷாம் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி கேரக்டரில் நடிக்கப்போகிறார்.இப்போது ஆந்திராவின் இளம் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் இணைந்து விட்டார் ஷாம் . எக்கச்சக்க வாய்ப்புகள் ஷாமைத் தேடி வரத் தொடங்கி விட்டன. கிக் படத்தை தொடர்ந்து அவர் ஒப்புக் கொண்டிருப்பது பூரி ஜகன்நாத்தின் நிஜ அரசியல்வாதி கதையம்சம் கொண்ட படத்தைத்தான். ஏற்கனவே போக்கிரி உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியிருக்கும் ஜகன்நாத், தற்போது ஷாமை வைத்து இயக்கவிருக்கும் இப்படத்திற்கு இன்னமும் பெயரிடவில்லை. ராஜசேகர ரெட்டியின் இளம் வயது வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் உருவாகவிருக்கிறதாம்.