11/20/09

சா...பூ...திரி

மூன்று பேருடைய காதல் அனுபவங்களே சா...பூ...திரி. கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் பிரஜன், காதல் மனைவியோடு கருத்து வேறுபாடு கொண்டு பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் வாழ்கிறார். ஆனால் இருவரும் செல்ஃபோனில் காதல் எஸ்.எம்.எஸ். அனுப்பி காலத்தை ஓட்டுகின்றனர்.கல்லூரி மாணவரான அர்ஷத்கான், பெண்களை காதலிக்கும் இளைஞர். அவர் ஒரு பெண் மீது காதல் கொள்ள, அவரோ இவருக்கு பெப்பே காட்டிவிட்டு "ஜிம் பாடி' இளைஞனுடன் ஓடி விடுகிறார். இதனால் வெறுப்பு வந்து விடுகிறது. பல வருடங்களாய் ஒரு பெண்ணைச் சுற்றி அவளை தன் காதல் வலையில் வீழ்த்துகிறார் அக்ஷய். ஆனால் அவருக்கு மிதுனாவை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். முதலில் மறுக்கும் அக்ஷய் பிறகு காதலியை உதறி மிதுனாவின் பின்னால் சுற்றுகிறார்.இந்த மூன்று இளைஞர்களின் தனி தனி வாழ்க்கை, முடிவில் எங்கு கொண்டு போய் சேர்க்கிறது என்பது கிளைமாக்ஸ். அர்ஷத்கானுக்கு வயதான பெண்கள் மீது வரும் காதல் காட்சிகள் படு அமர்க்களம். ஆனால் சில வசனங்களில் ஆபாசம் தெரிகிறது. அக்ஷய் காதலித்தவளை விட்டு பெற்றோர் பார்த்த பெண்ணுடன் நெருக்கமாகும் காட்சிகள் அழுத்தமானவை. பிரஜன் திருமண வாழ்க்கை கால்சென்டர் இறுக்கங்களை பிரதிபலிக்கிறது. இருவரும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாமல் செல்ஃபோனில் நண்பர்களுடன் ஜொள்ளு விடுவது நல்ல காமெடி! அதற்காக மனைவியின் ஃபோன் நம்பர் தெரியாமல் இருப்பதாக காட்டுவதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. மிதுனா,அக்ஷயா, உஜ்ஜயினி,பிங்கி, ரிஷ்வந்த் ஆகியோரும் மனதில் நிற்கின்றனர். அப்பாஸின் இசையும், சஞ்சய்யின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம். கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்பதையும், செய்யக் கூடாததை செய்யக் கூடாது என்பதையும் வலியுறுத்தும் இப்படம் இளமைக் காட்சிகளுடன் விறுவிறுப்பாக உள்ளது .

0 comments:

Post a Comment