
புதுப்படங்கள்தாயில்லாமல் தந்தையின் செல்லப் பிள்ளையாக வளரும் ஜெய், நண்பர்களுடன் சேர்ந்து பொழுதைக் கழிக்கிறார். பெண்களை போகப் பொருளாக நினைக்கும் அவர் விஜயலட்சுமியிடம் மட்டும் அன்பைக் காட்டுகிறார். ஆரம்பத்தில் மோதலில் ஆரம்பித்து கடைசியில் காதலில் வந்து நிற்கின்றனர். இவர்களது காதல் ஜெய்யின் தந்தைக்கு தெரிய, காதல் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நிலைக்க வேண்டுமானால் அதற்கு பணம் முக்கியம் என்று அவர் அறிவுரை செய்ய, இதனால் ஜெய் வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்கிறார். பணத்தை சம்பாதித்துக்கொண்டு திரும்பியதும் காதலி இன்னொருவனுக்கு மனைவியானது தெரிந்து அதிர்ந்து போகிறார் ஜெய். அவளை சந்திக்கும்போது அவள் சொல்லும் காரணம் அவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவளை மறக்க முடியாமலும், வேறு வாழ்க்கையை நினைக்க முடியாமலும் அல்லாடுகிறார். பிறகு ஏற்படும் திருப்பங்கள் மீதி படம்.காதல், மோதல் என ஜாலியாகச் செல்லும் கதையில் திடீர் திருப்பமாக கல்யாணம், அதன் பிறகு காதல் துரோகம் என காட்சிகள் வேறு இடத்திற்கு நகர்ந்து, பழிவாங்கும் போக்கிற்கு சென்று, காதலித்து ஏமாற்றுபவர்களுக்கு எச்சிரிக்கை மணி அடிக்கிறது, ஜெய், காதல் காட்சிகளில் துள்ளித் திரியும் காளையாக விளையாடியிருக்கிறார். காதலியை கொன்று விட்டு அவளை மடியில் அள்ளிப்போட்டு அழுகிற காட்சியில் நம்மையும் அழத் தூண்டுகிறார். வாழ்க்கையை புரிந்துகொள்ளும் யதார்த்தமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜயலட்சுமி. காதலித்த பாவத்துக்காக என் உடம்பையே தருகிறேன் என்று அவர் காதலனிடம் சொல்லும் காட்சியில் அதிர வைக்கிறார். விஜயலட்சுமியின் கணவராக வரும் ராகுல், கடைசி காட்சியில் கண்கலங்க வைக்கிறார். நண்பனாக வரும் "லொள்ளு' ஜீவா சிரிப்பை வரவழைக்கிறார். பிரேம்ஜி இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். காதலுக்கு துரோகம் செய்யும் காதலி, நம்பிக்கைக்கும் துரோகம் செய்தால் அவளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற ஒரு தீர்வான கருத்தை ஆக்ஷன் கலந்து இயக்கியிருக்கறார் புதியவர் பிரபு. இதில் பணம் வலக்கை இல்லை என்பதும் காதலில் ஈமருபவர்களின்நிலையும் காட்ட பட்டுள்ளது
0 comments:
Post a Comment