சுறா விஜய்யின் ஐம்பதாவது படம். சகல விதத்திலும் படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஹைதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பைத் தொடர்ந்து டிசம்பரில் கேரளா செல்கிறது மொத்த யூனிட்டும்.
11/27/09
கிசு கிசு
கிசு கிசு
இயக்குனரின் நிலை
உணர்ச்சிகளை ஓவராக உருட்டியதில் சேர இயக்குனரின் கடைசி இரண்டு படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் பிசுபிசுத்தது. இனி படம் இயக்க யாரும் வாய்ப்பு தருவார்களா என்பதே சந்தேகம் என்ற நிலையில் தனது பிளாக்பஸ்டர் படமான கையெழுத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஸ்கிரிப்ட் அமைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். யாரும் படத்தை தயாரிக்க முன்வராவிட்டால், நாலு படங்களில் நடித்து தானே சொந்தமாக தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
கிசு கிசு
தயாராகிறது எந்திரன் ?!
எந்திரன் படத்தின் டாக்கி போர்ஷன் முடிந்துவிட்டது. எந்திரன் படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய 180 கோடிகள் என்கின்றன செய்திகள். இந்த மெகா பட்ஜெட்டுக்கு ஏற்ப பிரமாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார் ஷங்கர்.டாக்கி போர்ஷன் முழுமையாக முடிந்த நிலையில் படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. ரஜினி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி வருகிறார். இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி இருப்பதாக நெருக்கமான வட்டாரம் தகவல் சொல்கிறது.
கிராஃபிக்ஸ் வேலைகள் இருப்பதால் 2010ல் தான் படம் வெளியாகும் என்கிறார்கள். அனேகமாக 2010 தீபாவளிக்கு படம் வெளியாகும். அதற்குமுன் சுல்தான் தி வாரியரை வெளியிடும் முனைப்பில் இருக்கிறது ரஜினி வட்டாரம்
கிராஃபிக்ஸ் வேலைகள் இருப்பதால் 2010ல் தான் படம் வெளியாகும் என்கிறார்கள். அனேகமாக 2010 தீபாவளிக்கு படம் வெளியாகும். அதற்குமுன் சுல்தான் தி வாரியரை வெளியிடும் முனைப்பில் இருக்கிறது ரஜினி வட்டாரம்
11/23/09
கிசு கிசு
வருகிறது யோகி !!
பருத்திவீரன்லிருந்து தமிழக ரசிகர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. அதற்குள் அதைவிட பிரமாதமாக ஒரு படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் அமீர். விளம்பரம் இல்லாமலே போட்ட காசை பார்த்துவிடலாம். விளம்பரமும் சேர்ந்தால்...? யோகி படத்தை வாங்க சன் பிக்சர்ஸ் முயன்றும் அது நடக்கவில்லை. இத்தனைக்கும் யோகியை சன் பிக்சர்ஸ் வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாயின. இடையில் என்ன நடந்ததோ? யோகியை சன்னுக்கு விடாமல் அமீரே விலைபேசி ஏரியா விற்பனையை நடத்தியிருக்கிறார். சில ஏரியாக்களில் அவரே படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம்.பக்ரித் பண்டிகையை முன்னிட்டு யோகி திரைக்கு வருகிறது.
11/22/09
கிசு கிசு
பசங்க படத்திற்கு விருது

பசங்க' திரைப்படத்துக்காக சர்வதேச அளவிலான சிறந்த இயக்குநருக்கான (தங்க யானை விருது) விருதை பெற்றார் இயக்குநர் பாண்டிராஜ். ஹைதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 20 நாடுகளைச் சேர்ந்த 70 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த பட விழாவில் தமிழில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற "பசங்க' திரைப்படம் "கிட்ஸ்' என்ற பெயரில் திரையிடப்பட்டது. இயக்குநர் சசிகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் சேரனின் உதவியாளர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் குழந்தைகளின் உலகத்தை தனி பாணியில் படம் பிடித்துக் காட்டியிருந்தது. திரைப்பட விழாவின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (அக்-20) விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறந்த குழந்தைகள் பட இயக்குநராக பாண்டிராஜ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கான விருதை (தங்க யானை விருது) பிரபல இந்தி நடிகை ஜூகி சாவ்லா வழங்கினார். "டூ மென்'ஸ் கிளாஸ் ரூம்' (சீனா), "ஹெல்ப் மைன் ஹெல்ப்' (ஈரான்), சிறந்த திரைப்படங்களாகவும், "சைல்டு அண்ட் தி ஏஞ்சல்' (ஈரான்) சிறந்த திரைக்கதையுள்ள படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
கிசு கிசு
கலக்குறீங்க சிம்ரன் !!!

சிம்ரன் திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் ஓரிரு படங்களில் நடித்தாலும், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார். இதன் மூலம் நிறைய சம்பாதிக்கிறாராம். ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ரூ. 75 லட்சம் சம்பளம் நிர்ணயித்துள்ளார். தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் வாங்குகிறார். கூடுதலாக இரவில் நடிக்க ரூ.2 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.5 லட்சம் வாங்குகிறார்.
கிசு கிசு
ஷாமின் அவதாரம் ?
நடிகர் ஷாம் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி கேரக்டரில் நடிக்கப்போகிறார்.இப்போது ஆந்திராவின் இளம் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் இணைந்து விட்டார் ஷாம் . எக்கச்சக்க வாய்ப்புகள் ஷாமைத் தேடி வரத் தொடங்கி விட்டன. கிக் படத்தை தொடர்ந்து அவர் ஒப்புக் கொண்டிருப்பது பூரி ஜகன்நாத்தின் நிஜ அரசியல்வாதி கதையம்சம் கொண்ட படத்தைத்தான். ஏற்கனவே போக்கிரி உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியிருக்கும் ஜகன்நாத், தற்போது ஷாமை வைத்து இயக்கவிருக்கும் இப்படத்திற்கு இன்னமும் பெயரிடவில்லை. ராஜசேகர ரெட்டியின் இளம் வயது வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் உருவாகவிருக்கிறதாம்.
கிசு கிசு
இது அசின் கதைங்கோ!!!
நடிகை அசின் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசிக்கிறார் என்று வெளியான செய்தியை அவரது தந்தை மறுத்துள்ளார். நடிகை அசினுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, அவர் எங்களை விட்டு பிரிந்து தனியாக வசிக்கவும் இல்லை என்றார் .மும்பையின் லோக்கண்ட்வாலா பகுதியிலும் கிரீன் ஏக்கர்ஸ் பகுதியிலும் எங்களுக்கு இரண்டு வீடுகள் உள்ளன. கிரீன் ஏக்கர்ஸில் உள்ள வீட்டை கதைகள் கேட்கவும் மீடியாக்களைச் சந்திக்கவும் பயன்படுத்தி வருகிறார் அசின். அவருடைய வேலைக்கு வசதியா இருக்கவே அவர் அங்கு இருக்கிறார் . நான், என் மனைவி, அசின் ஆகிய மூவரும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகிறோம் என்று கூறினார் .
கிசு கிசு
விஜயை புகழும் நடிகை ?
"ரெண்டு' படத்தில் நடித்த போது, மாதவனை பற்றி கேட்டால், "நோ கமென்ட்ஸ்' என்று சொன்ன அனுஷ்கா, இப்போது, "வேட்டைக்காரன்' படத்தில், விஜயுடன் நடித்த அனுபவத்தை, வண்டி வண்டியாக கொட்டுகிறார். "விஜய் சிறப்பாக நடனமாடக் கூடியவர்; ஜனரஞ்சகமாக நடிக்கக் கூடியவர். இதற்கெல்லாம் மேலாக, நடிகைகளை மதிக்கக் கூடியவர்' என்று, ஓவராய் புகழ்ந்து தள்ளுகிறார்
11/21/09
கிசு கிசு
மீண்டும் சொர்ணமால்யா
இளமை புதுமை நிகழ்ச்சியை புதுமையாக தொகுத்து வழங்கியவர் சொர்ணமால்யா. சில திரைப்படங்களில் நடித்தவர் மீண்டும் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறார். இந்தமுறை நெடுந்தொடர் நாயகியாகி இருக்கிறார்.ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடிக்கவிருக்கிறார் .
11/20/09
கிசு கிசு
டைவர்ஸ் செய்கிறார் காயத்ரி ரகுராம்!
தனது அமெரிக்க கணவரை விவாகரத்து செய்ய விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.
இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர்களான ரகுராம்- கிரிஜா ஆகியோரின் மகள். டான்ஸ் மாஸ்டர் கலா இவருக்கு சித்தி ஆவார்.
2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் சந்திரசேகருக்கும கல்யாணம் நடந்தது. தீபக் சந்திரசேகர் சாப்ட்வேர் என்ஜீனியர் ஆவார். சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றப் போவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளார் காயத்ரி ரகுராம். சமீப காலமாக ஏராளமான நடிகைகள் விவாகரத்தை நோக்கி போய்க் கொண்டுள்ளனர். திருமணம் செய்த வேகத்தில் பிரிவதும் திரையுலகில் சகஜமாகி வருகிறது. இந்த வரிசையில் தற்போது காயத்ரி ரகுராம்.
இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர்களான ரகுராம்- கிரிஜா ஆகியோரின் மகள். டான்ஸ் மாஸ்டர் கலா இவருக்கு சித்தி ஆவார்.
2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் சந்திரசேகருக்கும கல்யாணம் நடந்தது. தீபக் சந்திரசேகர் சாப்ட்வேர் என்ஜீனியர் ஆவார். சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றப் போவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளார் காயத்ரி ரகுராம். சமீப காலமாக ஏராளமான நடிகைகள் விவாகரத்தை நோக்கி போய்க் கொண்டுள்ளனர். திருமணம் செய்த வேகத்தில் பிரிவதும் திரையுலகில் சகஜமாகி வருகிறது. இந்த வரிசையில் தற்போது காயத்ரி ரகுராம்.
கிசு கிசு
கணேஷ், ஆர்த்தி கல்யாணம்
நகைச்சுவை கலைஞர்கள் ஆர்த்தி, கணேஷ் தருமணம் குருவாயூரில் சிறப்பாக நடந்தது. என் தங்கை கல்யாணி படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரங்கள் கணேஷ், ஆர்த்தி. அதன் பின்னர் பல்வேறு படங்களில் இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.அதன் பின்னர் டிவியில் புகுந்த இருவரும் அதன் மூலம் பிரபலமாகினர். டிவியில் நடித்தபோது கணேஷுக்கும், ஆர்த்திக்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க தற்போது இந்தக் காதல் கல்யாணமாகியுள்ளது.
கிசு கிசு
இறந்தாலும் ஆயிரம் பொன்!
பாப் உலகின் முடிச்சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சனின் புகழும், செல்வமும் அனைவரையும் கவர்ந்ததே! வாழ்நாளில் அவர் சம்பாதித்த செல்வத்திற்கும், அவர் அதை செலவு செய்ததற்கும் கணக்கே இல்லை. இன்று அவர் விட்டுச் சென்ற சொத்திற்கு குடுமிப் பிடிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. உயிருடன் இருந்தபோது சம்பாதித்தது போல் இறந்த பிறகும் அவருடைய பெயர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
vimarsanam
சா...பூ...திரி
மூன்று பேருடைய காதல் அனுபவங்களே சா...பூ...திரி. கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் பிரஜன், காதல் மனைவியோடு கருத்து வேறுபாடு கொண்டு பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் வாழ்கிறார். ஆனால் இருவரும் செல்ஃபோனில் காதல் எஸ்.எம்.எஸ். அனுப்பி காலத்தை ஓட்டுகின்றனர்.கல்லூரி மாணவரான அர்ஷத்கான், பெண்களை காதலிக்கும் இளைஞர். அவர் ஒரு பெண் மீது காதல் கொள்ள, அவரோ இவருக்கு பெப்பே காட்டிவிட்டு "ஜிம் பாடி' இளைஞனுடன் ஓடி விடுகிறார். இதனால் வெறுப்பு வந்து விடுகிறது. பல வருடங்களாய் ஒரு பெண்ணைச் சுற்றி அவளை தன் காதல் வலையில் வீழ்த்துகிறார் அக்ஷய். ஆனால் அவருக்கு மிதுனாவை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்கின்றனர். முதலில் மறுக்கும் அக்ஷய் பிறகு காதலியை உதறி மிதுனாவின் பின்னால் சுற்றுகிறார்.இந்த மூன்று இளைஞர்களின் தனி தனி வாழ்க்கை, முடிவில் எங்கு கொண்டு போய் சேர்க்கிறது என்பது கிளைமாக்ஸ். அர்ஷத்கானுக்கு வயதான பெண்கள் மீது வரும் காதல் காட்சிகள் படு அமர்க்களம். ஆனால் சில வசனங்களில் ஆபாசம் தெரிகிறது. அக்ஷய் காதலித்தவளை விட்டு பெற்றோர் பார்த்த பெண்ணுடன் நெருக்கமாகும் காட்சிகள் அழுத்தமானவை. பிரஜன் திருமண வாழ்க்கை கால்சென்டர் இறுக்கங்களை பிரதிபலிக்கிறது. இருவரும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாமல் செல்ஃபோனில் நண்பர்களுடன் ஜொள்ளு விடுவது நல்ல காமெடி! அதற்காக மனைவியின் ஃபோன் நம்பர் தெரியாமல் இருப்பதாக காட்டுவதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. மிதுனா,அக்ஷயா, உஜ்ஜயினி,பிங்கி, ரிஷ்வந்த் ஆகியோரும் மனதில் நிற்கின்றனர். அப்பாஸின் இசையும், சஞ்சய்யின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம். கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்பதையும், செய்யக் கூடாததை செய்யக் கூடாது என்பதையும் வலியுறுத்தும் இப்படம் இளமைக் காட்சிகளுடன் விறுவிறுப்பாக உள்ளது .
விமர்சனம்
கண்டேன் காதலை ....

தொழில் அதிபர் மகன் பரத் காதலில் தோற்று விரக்தியாகிறார். சொத்து சுகங்களை ஒதுக்கிவிட்டு கால் போன போக்கில் போகிறார். மதுரை செல்லும் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் ஏறுகிறார். அதே ரெயிலில் பயணம் செய்யும் தமன்னா எதையும் சீரியசாக எடுக்காத வாயாடி. பரத்துக்கு அவர் உதவுகிறார். பரத்தும் ரவுடிகளிடம் சிக்கும் தமன்னாவை காப்பாற்றி கைமாறு செய்கிறார்.இருவரும் நட்பாகிறார்கள். ரெயிலை தவறவிடும் தமன்னாவை தேனியில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விடுகிறார். பயணத்தில் தமன்னாவால் கவலைகளை விட்டு புத்துணர்ச்சி பெறுகிறார். தமன்னாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. அவர் தன்னுடன் படித்த கவுதமை ஏற்கனவே காதலிப்பதால் வீட்டை விட்டு ஓடுகிறார். பரத்தும் தமன்னாவுடன் சென்று காதலன் வசிக்கும் ஊட்டியில் கொண்டு விட்டு விட்டு பிரிவு வலியோடு சென்னை திரும்புகிறார்.தமன்னாவின் வாழ்வியல் மந்திரங்களை மனதில் பதித்து பிசினசை தூக்கி நிறுத்துகிறார்.
தமன்னாவை காணாத பெற்றோர் ஒன்பது மாதத்துக்கு பிறகு பரத்தை தேடி பிடித்து கேட்கின்றனர். தமன்னாவை அழைத்து வருவதாக வாக்குறுதி அளித்து ஊட்டிக்கு செல்கிறார். அங்கு காதலனால் ஏமாற்றப்பட்டு சந்தோஷங்களை தொலைத்து நிற்கும் தமன்னாவை பார்க்கிறார். கவுதமிடம் பேசி இருவரையும் சேர்த்து வைத்து தேனிக்கு அழைத்து வருகிறார். தமன்னா குடும்பத்தினரோ பரத்துக்கும் தமன்னாவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். தமன்னா யாரை மணக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
அழுத்தமான காதலை வித்தியாசமான காட்சியமைப்பில் மனதில் பதிய வைத்துள்ளார் இயக்குனர் ஆர்.கண்ணன்.
கோட், சூட்டில் இளம் தொழில் அதிபர் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் பரத்.காதலி இன்னொரு வரை மணந்ததும் நொறுங்கி சோகமாகுகிறார். தமன்னாவின் கள்ளமில்லா வெள்ளை சேட்டைகளில் ஈர்ப்பாகி மீண்டு வருவது நச்...
நான் தேனி பொண்ணு என்று பட பட வென பொரியும் அஞ்சலி கேரக்டரில் வாழ்கிறார் தமன்னா. ரெயில் நிலையத்தில் இரண்டு ரூபாய்க்காக கடைக்காரனிடம் சண்டையிட்டு ரெயிலை தவறவிடுவது... முறைமாப்பிள்ளையை கட்டிக்க மறுத்து ஓடுவது துறுதுறு. காதலன் கைகழுவும் போது பரிதாபபட வைக்கிறார்.
தமன்னா தாய் மாமனாக வரும் சந்தானம் காமெடியில் வெளுக்கிறார். வித்யாசாகரின் பின்னணி இசை: பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் அழகூட்டுகிறது. முன்னா கேரக்டரும் வலிமை.
கணவனை விட்டு ஆடிட்டருடன் ஓடிய தாயின் காதலை நியாயப்படுத்தும் சீன்கள் கலாசார பிழை. கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பும் துறு துறுப்புமாய் நிமிர வைக்கிறது.
விமர்சனம்
இன்று முதல் "பழசிராஜ"
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் படம் பழசிராஜா. மலையாளப் படமான இது ஜெயமோகன் வசனத்தில் தமிழப்படுத்தப்பட்டிருக்கிறது.
பழசிராஜா என்ற குறுநில மன்னர் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட சரித்திமே இந்தப் படத்தின் கதை. பழசிராஜாவாக மம்முட்டியும், அவரது வீரமிகு தளபதியாக சரத்குமாரும் நடித்துள்ளனர்.
ஹரிஹரன் படத்தை இயக்கியிருக்கிறார். படத்துக்கு திரைக்கதை அமைத்திருப்பவர் எம்.டி.வாசுதேவன் நாயர். இவரது திரைக்கதையில் உருவான சரித்திரப் படம், ஒரு வடக்கன் வீர காதா மம்முட்டிக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
உயர்குடி பெண்ணாக கனிகா நடித்திருக்கிறார். ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த நீலி எனும் பெண் போராளியாக பத்மப்ரியா நடித்துள்ளார். இளையராஜா இசையில் பாடல்கள் எழுதியிருப்பவர் வாலி.
ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டியின் உழைப்பு படத்தின் தரத்தை மேலும் கூட்டியிருக்கிறது. மலையாளத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு கிடைத்திருக்கிறது.
இன்று முதல் திரைவெளியிட படுகிறது .
பழசிராஜா என்ற குறுநில மன்னர் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட சரித்திமே இந்தப் படத்தின் கதை. பழசிராஜாவாக மம்முட்டியும், அவரது வீரமிகு தளபதியாக சரத்குமாரும் நடித்துள்ளனர்.
ஹரிஹரன் படத்தை இயக்கியிருக்கிறார். படத்துக்கு திரைக்கதை அமைத்திருப்பவர் எம்.டி.வாசுதேவன் நாயர். இவரது திரைக்கதையில் உருவான சரித்திரப் படம், ஒரு வடக்கன் வீர காதா மம்முட்டிக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
உயர்குடி பெண்ணாக கனிகா நடித்திருக்கிறார். ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த நீலி எனும் பெண் போராளியாக பத்மப்ரியா நடித்துள்ளார். இளையராஜா இசையில் பாடல்கள் எழுதியிருப்பவர் வாலி.
ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டியின் உழைப்பு படத்தின் தரத்தை மேலும் கூட்டியிருக்கிறது. மலையாளத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு கிடைத்திருக்கிறது.
இன்று முதல் திரைவெளியிட படுகிறது .
கிசு கிசு
ஆயிரத்தில் ஒருவன்' வரட்டும்...
ஆயிரத்தில் ஒருவன்' வரட்டும்...
கொல்கத்தா அழகியான அந்த `சென்' நடிகை நடித்த அத்தனை படங்களும் `சூப்பர்ஹிட்.' என்றாலும் அவர் அதிக படங்களை ஒப்புக்கொள்ளாமல், தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த வருடம் அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை. இருப்பினும் எந்த புதிய பட வாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லை. ``ஆயிரத்தில் ஒருவன் வரட்டும்...அதன்பிறகு பார்க்கலாம்'' என்கிறார்!
தரவரிசை
டாப் 10 படங்கள்--- இந்த வாரம்
1. பேராண்மை பேராண்மை
2. ஆதவன் ஆதவன்
3. கண்டேன் காதலை உன்னைப்போல் ஒருவன்
4. ஈரம் கண்டேன் காதலை
5. கந்தசாமி கந்தசாமி
6. உன்னைப்போல் ஒருவன் ஈரம்
7. ஜகன் மோகினி அதே நேரம் அதே இடம்
8. சா... பூ.. த்ரி சா... பூ.. த்ரி
9. அதே நேரம் அதே இடம் ஜகன் மோகினி
கிசு கிசு
மவுசு குறையாத ஐஸ் !!!
'உலக அழகி ' பட்டம் பெற்று 10 ஆண்டுகள் ஆகியும் ஐஸ்வர்யாராய்க்கு சக அழகிகள் இடையே மவுசு இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் உலகின் அழகான 100 பெண்களில் ஐஸ்வர்யா ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார். இவர் திருமணம் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் அழகை பாதுகாத்து வருகிறார்........
கிசு கிசு
பொங்கல் வரவு !!!
வருகிற பொங்கல் தினத்தில் பல படங்கள் போட்டிக்களத்தில் இறங்குகின்றன. இதில் , விஜயின் வேட்டைக்காரன் , அஜித்தின் அசல் ,சிம்புவின் விண்ணைத் தாண்டி வருவாயா , கார்த்திக்கின் பையா ஆகிய படங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.
11/19/09
விமர்சனம்
அதே நேரம் அதே இடம்

புதுப்படங்கள்தாயில்லாமல் தந்தையின் செல்லப் பிள்ளையாக வளரும் ஜெய், நண்பர்களுடன் சேர்ந்து பொழுதைக் கழிக்கிறார். பெண்களை போகப் பொருளாக நினைக்கும் அவர் விஜயலட்சுமியிடம் மட்டும் அன்பைக் காட்டுகிறார். ஆரம்பத்தில் மோதலில் ஆரம்பித்து கடைசியில் காதலில் வந்து நிற்கின்றனர். இவர்களது காதல் ஜெய்யின் தந்தைக்கு தெரிய, காதல் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நிலைக்க வேண்டுமானால் அதற்கு பணம் முக்கியம் என்று அவர் அறிவுரை செய்ய, இதனால் ஜெய் வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்கிறார். பணத்தை சம்பாதித்துக்கொண்டு திரும்பியதும் காதலி இன்னொருவனுக்கு மனைவியானது தெரிந்து அதிர்ந்து போகிறார் ஜெய். அவளை சந்திக்கும்போது அவள் சொல்லும் காரணம் அவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவளை மறக்க முடியாமலும், வேறு வாழ்க்கையை நினைக்க முடியாமலும் அல்லாடுகிறார். பிறகு ஏற்படும் திருப்பங்கள் மீதி படம்.காதல், மோதல் என ஜாலியாகச் செல்லும் கதையில் திடீர் திருப்பமாக கல்யாணம், அதன் பிறகு காதல் துரோகம் என காட்சிகள் வேறு இடத்திற்கு நகர்ந்து, பழிவாங்கும் போக்கிற்கு சென்று, காதலித்து ஏமாற்றுபவர்களுக்கு எச்சிரிக்கை மணி அடிக்கிறது, ஜெய், காதல் காட்சிகளில் துள்ளித் திரியும் காளையாக விளையாடியிருக்கிறார். காதலியை கொன்று விட்டு அவளை மடியில் அள்ளிப்போட்டு அழுகிற காட்சியில் நம்மையும் அழத் தூண்டுகிறார். வாழ்க்கையை புரிந்துகொள்ளும் யதார்த்தமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜயலட்சுமி. காதலித்த பாவத்துக்காக என் உடம்பையே தருகிறேன் என்று அவர் காதலனிடம் சொல்லும் காட்சியில் அதிர வைக்கிறார். விஜயலட்சுமியின் கணவராக வரும் ராகுல், கடைசி காட்சியில் கண்கலங்க வைக்கிறார். நண்பனாக வரும் "லொள்ளு' ஜீவா சிரிப்பை வரவழைக்கிறார். பிரேம்ஜி இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். காதலுக்கு துரோகம் செய்யும் காதலி, நம்பிக்கைக்கும் துரோகம் செய்தால் அவளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற ஒரு தீர்வான கருத்தை ஆக்ஷன் கலந்து இயக்கியிருக்கறார் புதியவர் பிரபு. இதில் பணம் வலக்கை இல்லை என்பதும் காதலில் ஈமருபவர்களின்நிலையும் காட்ட பட்டுள்ளது
தரவரிசை
புதுசுப்பா புதுசு
- 1.2012
- 2.மாத்தியோசி
- 3.விழியில் விழுந்தவள்
- 4.வானம் பார்த்த சீமையிலே
- 5.சைதை செல்லா
- 6.மாத்தியோசி
- 7.ஏன் இப்படி மயக்கினாய்
- 8.தைரியம்
- 9.சோக்காளி
- 10.அறியான்
விமர்சனம்
ஜகன் மோகினி - நமிதாவின் அட்டகாசம் !!!!!!!
விட்டலாச்சாரியா இயக்கத்தில், ஜெயமாலினி நடிப்பில், சக்கை போடு போட்ட பழைய "ஜகன் மோகனி' கதை இன்றைக்கு நமீதா நடிப்பில் இயக்கி இருக்கிறார் என்.கே.விஸ்வநாதன். பச்சை மலைத்தீவு மன்னர் நரசிம்மராஜு.அவரது ஒரே மகன் ராஜாவுக்கு வேறு நாட்டு இளவரசியான நிலாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் கோலாகலமாக நடக்கிறது. கல்யாணம் நடக்கும் முன் நமீதா ஆவியாக வந்து தடுக்கிறார். இதனால் மக்கள் பீதியடைகின்றனர் . மன்னர் அதிர்ந்து போக, சாமியார் ஒருவர் தனது மந்திரத்தால் நமீதாவின் ஆவியை ஒரு ஜாடிக்குள் அடைத்து விடுகிறார்.இளவரசனை காப்பாற்றிய சாமியாரை தெய்வமாக நினைக்கிறார் மன்னர். திருமணத்தில் தடை ஏற்பட்டதால் வேறு ஒரு தேதியில் திருமணத்தை நடத்துங்கள் என்று கூறுகிறார் சாமியார். இளவரசன் ராஜா கடல் கொள்ளையனைப் பிடிக்க மாறு வேடத்தில் பக்கத்துத் தீவுக்கு சென்றபோது அங்கு அவருக்கு உதவுகிறார் மீனவ பெண்ணான நமீதா. அப்போது இருவருக்குள்ளும் காதலாக மலர்கிறது .அலைக்கள்ளன் என்ற பெயரில் கடல் கொள்ளையனாக இருப்பது தன் மகன் ரியாஸ்கான் என்று அந்த பச்சை தீவு மன்னர் பாலாசிங்குக்கு தெரிந்தபோது அதிர்ச்சியடைகிறார். மகனைகண்டிக்கவும் , மகனோ தந்தையை மிரட்டுவதோடு சுற்றி இருக்கும் எல்லாத் தீவுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போகிறேன் என்று மிரட்டுகிறான்.மலைக்கள்ளனை அவனது இடத்துக்கு மாறு வேடத்தில் சென்று கைது செய்து தனது மலைத்தீவு சிறையில் அடைக்கிறார் இளவரசன். மகனின் வீரத்தை போற்றும் மன்னர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்.அவனோ தான் பார்த்த நமீதாவை பற்றியும், காதல் பற்றியும் சொல்கிறார். ஜாதி பார்க்கும் மன்னர், மகனிடம் சம்மதம் என தலையாட்டிவிட்டு, பச்சைத் தீவு மன்னர் பாலாசிங் மூலமாக நமீதாவின் தலையை எடுக்க வைத்து அதற்கு கூலியாக அவரது மகனை விடுவிக்கிறார்.காதலியை அழைத்து வர சென்ற இளவரசன், அவள் பணத்துக்காக வேறு நாட்டு மன்னரின் அந்தபுரத்திற்கு அடிமையாகிவிட்டாள் என்ற பொய்யைக் கேட்டு அதிர்ந்து போகிறார். அவள் மீதிருந்த காதல் கோபமாக மாறி, நிலாவை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். அதற்குப் பிறகு ஏற்படும் திருப்பங்கள் சுவாரஸ்யமானவை. மந்திர தந்திர காட்சிகளுடன் மன்னர் காலத்தை கண்முன் நிறுத்துகிறது படம். கடலில் இருந்து பனை உயரத்துக்கு தண்ணீர் மோகினி உருவமாக எழுந்து நாட்டுக்கள் நடந்து வருவது, மரம் கை நீட்டி ஆட்களைப் பிடித்து கொல்லுவது, அந்தரத்தில் பறக்கும் மனிதர்கள் என மாயா ஜால வித்தைகளால் படம் பார்ப்பவர்களை கட்டிப் போடுகிறார் இயக்குனர் என்.கே.விஸ்வநாதன்.மோகினி கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி கவர்ச்சியை அள்ளி இறைத்திருக்கிறார் நமீதா! இளவரசன் மீது காதல் வயப்பட்டு நீருக்குள் அநியாயமாக கொல்லப்படும்போது பரிதாபப்பட வைக்கும் நமீதா, மோகினியாக மாறி மந்திரவாதியுடன் மோதும்போதும், காதலனை கடத்த முயற்சிக்கும்போதும் காட்டும் ஆவேசம் அருமை !இளவரசனாக வரும் ராஜா ஜகன்மோகினியிடம் காதல் வயப்படும்போது இனிமை. கொள்ளையன், அலைக்கள்ளனுடன் மோதும்போது ஆவேசம்.இளவரசனை காப்பாற்ற அம்மனிடம் வேண்டும் நிலாவின் சென்டிமென்ட் காட்சி மனதில் நிற்கின்றது. வடிவேலு, "வெண்ணிற ஆடை' மூர்த்தி சிரிக்க வைக்கின்றனர். மோசக்கார மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். நமீதாவை கொல்லும் அலெக்ஸ், கொள்ளைக்கார இளவரசனாக வரும் ரியாஸ்கான் என எல்லோரும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் பார்த்து மகிழக் கூடிய படம்.........
Subscribe to:
Posts (Atom)