11/19/09
ஜகன் மோகினி - நமிதாவின் அட்டகாசம் !!!!!!!
விட்டலாச்சாரியா இயக்கத்தில், ஜெயமாலினி நடிப்பில், சக்கை போடு போட்ட பழைய "ஜகன் மோகனி' கதை இன்றைக்கு நமீதா நடிப்பில் இயக்கி இருக்கிறார் என்.கே.விஸ்வநாதன். பச்சை மலைத்தீவு மன்னர் நரசிம்மராஜு.அவரது ஒரே மகன் ராஜாவுக்கு வேறு நாட்டு இளவரசியான நிலாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் கோலாகலமாக நடக்கிறது. கல்யாணம் நடக்கும் முன் நமீதா ஆவியாக வந்து தடுக்கிறார். இதனால் மக்கள் பீதியடைகின்றனர் . மன்னர் அதிர்ந்து போக, சாமியார் ஒருவர் தனது மந்திரத்தால் நமீதாவின் ஆவியை ஒரு ஜாடிக்குள் அடைத்து விடுகிறார்.இளவரசனை காப்பாற்றிய சாமியாரை தெய்வமாக நினைக்கிறார் மன்னர். திருமணத்தில் தடை ஏற்பட்டதால் வேறு ஒரு தேதியில் திருமணத்தை நடத்துங்கள் என்று கூறுகிறார் சாமியார். இளவரசன் ராஜா கடல் கொள்ளையனைப் பிடிக்க மாறு வேடத்தில் பக்கத்துத் தீவுக்கு சென்றபோது அங்கு அவருக்கு உதவுகிறார் மீனவ பெண்ணான நமீதா. அப்போது இருவருக்குள்ளும் காதலாக மலர்கிறது .அலைக்கள்ளன் என்ற பெயரில் கடல் கொள்ளையனாக இருப்பது தன் மகன் ரியாஸ்கான் என்று அந்த பச்சை தீவு மன்னர் பாலாசிங்குக்கு தெரிந்தபோது அதிர்ச்சியடைகிறார். மகனைகண்டிக்கவும் , மகனோ தந்தையை மிரட்டுவதோடு சுற்றி இருக்கும் எல்லாத் தீவுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போகிறேன் என்று மிரட்டுகிறான்.மலைக்கள்ளனை அவனது இடத்துக்கு மாறு வேடத்தில் சென்று கைது செய்து தனது மலைத்தீவு சிறையில் அடைக்கிறார் இளவரசன். மகனின் வீரத்தை போற்றும் மன்னர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்.அவனோ தான் பார்த்த நமீதாவை பற்றியும், காதல் பற்றியும் சொல்கிறார். ஜாதி பார்க்கும் மன்னர், மகனிடம் சம்மதம் என தலையாட்டிவிட்டு, பச்சைத் தீவு மன்னர் பாலாசிங் மூலமாக நமீதாவின் தலையை எடுக்க வைத்து அதற்கு கூலியாக அவரது மகனை விடுவிக்கிறார்.காதலியை அழைத்து வர சென்ற இளவரசன், அவள் பணத்துக்காக வேறு நாட்டு மன்னரின் அந்தபுரத்திற்கு அடிமையாகிவிட்டாள் என்ற பொய்யைக் கேட்டு அதிர்ந்து போகிறார். அவள் மீதிருந்த காதல் கோபமாக மாறி, நிலாவை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். அதற்குப் பிறகு ஏற்படும் திருப்பங்கள் சுவாரஸ்யமானவை. மந்திர தந்திர காட்சிகளுடன் மன்னர் காலத்தை கண்முன் நிறுத்துகிறது படம். கடலில் இருந்து பனை உயரத்துக்கு தண்ணீர் மோகினி உருவமாக எழுந்து நாட்டுக்கள் நடந்து வருவது, மரம் கை நீட்டி ஆட்களைப் பிடித்து கொல்லுவது, அந்தரத்தில் பறக்கும் மனிதர்கள் என மாயா ஜால வித்தைகளால் படம் பார்ப்பவர்களை கட்டிப் போடுகிறார் இயக்குனர் என்.கே.விஸ்வநாதன்.மோகினி கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி கவர்ச்சியை அள்ளி இறைத்திருக்கிறார் நமீதா! இளவரசன் மீது காதல் வயப்பட்டு நீருக்குள் அநியாயமாக கொல்லப்படும்போது பரிதாபப்பட வைக்கும் நமீதா, மோகினியாக மாறி மந்திரவாதியுடன் மோதும்போதும், காதலனை கடத்த முயற்சிக்கும்போதும் காட்டும் ஆவேசம் அருமை !இளவரசனாக வரும் ராஜா ஜகன்மோகினியிடம் காதல் வயப்படும்போது இனிமை. கொள்ளையன், அலைக்கள்ளனுடன் மோதும்போது ஆவேசம்.இளவரசனை காப்பாற்ற அம்மனிடம் வேண்டும் நிலாவின் சென்டிமென்ட் காட்சி மனதில் நிற்கின்றது. வடிவேலு, "வெண்ணிற ஆடை' மூர்த்தி சிரிக்க வைக்கின்றனர். மோசக்கார மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். நமீதாவை கொல்லும் அலெக்ஸ், கொள்ளைக்கார இளவரசனாக வரும் ரியாஸ்கான் என எல்லோரும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் பார்த்து மகிழக் கூடிய படம்.........
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment